Monday, July 27, 2015



மழையின் ஒவ்வொரு துளியும் ஏதோ ஒன்றை முத்தமிடுகிறது
சிறு புல்லினை
பூக்களின் இதழ்களை
சருகுகளை
பாறைகளை 
உயிரினங்களை
மரம்,செடிகளை
என் வீட்டின் ஜன்னல்களை
பல சமயங்களில் என்னையும் முத்தமிட்டு உயிர்ப்பிக்கிறது ...


உனக்காக
சேமித்த வசனங்களை
என்னால் ஒப்புவிக்க
முடியவில்லை
மௌனமாய் சிரித்து
வார்த்தைகளை
தொலைத்து நிற்கிறேன்
வழக்கம் போல...


என் இமைகளை மூடி
கனவில்
உன் விழிகளை நான் திறந்தேன்...


உடல்
காய்ந்தாலும் மழையில்
நனைதலை
விரும்புகிறது
இவ்வுடல் ...
புத்தகம்



பிரித்து வைத்திருந்த
புத்தகத்தில் நிகழ்ந்தவை
கதையின் கதாபாத்திரங்கள்
உயிர் பெற்று கதையுடன் வாழத் தொடங்கினர்
சத்தமில்லாமல் விரித்த புத்தகத்தை மூடாமல் 
அறையின் கதவை மூடிச் சென்றேன் ....

x



பால்ய காலத்தின் நினைவுகள் சில நெஞ்சில் ஆணியடித்துக் கொண்டுதான் இருக்கிறது இன்னும் இது ஒரு வகையான ஏங்கித் தவிக்கும் ஒரு உணர்வு...


என்னை
சாம்பல் பூத்த முத்தங்களிலும்
உயிரூட்டலாம்
நீ ...